நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!952891783
நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! சென்னை: நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் என வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்து உள்ளது. நடிகர் விஜய், கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தெரிவித்தது. நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது. இந்த நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக ரூ.30,23,609 செலுத்த வேண்டுமென 2021 டிசம்பர் 17ல் வணிக வரித்துறை மீண்டும் விஜய்க்க...