தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!353876084
தொடரும் சோகம்- நீட் தேர்வுக்கு பயந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை! அரியலூர்: மருத்துவக் கல்வி பயில மத்திய அரசு கொண்டு வந்த நீட் நுழைவுத் தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாகி விட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறையில் அனிதா என்ற மாணவி நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்தார். அவரின் தற்கொலை அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரில் மீண்டும் ஒரு மாணவி நேற்று நள்ளிரவு தற்கொலை செய்தார். அரியலூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியருக்கு நிஷாந்தினி (வயது 18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர். இதில் நிஷாந்தினி அருகிலுள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்றார். பொதுத்தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார். சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தார். இதை அடுத்து கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில்