முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீமான்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீமான்! சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூருக்கு நேற்று நேரில் சென்றார். அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது திடீரென சீமான் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை சுற்றியிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவர் மயங்கியதை அடுத்து அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சீமான் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் நேற்று மாலையே வீடு திரும்பினார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மயங்கி வி...