Posts

Showing posts with the label #Country | #Language | #Enemies | #India

ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு! 1728940809

Image
ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு! மு.க.ஸ்டாலின் பேச்சு இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக கருந்தரங்கு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட போது மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ வைத்தது. கூட்டாட்சி கருத்தியலும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்தது தான் இந்தியாவை முன்னேற்றி உள்ளன. இந்தியாவின் வேற்றுகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இருந்தார்.   நேருவின் பெருமை மொழிவாரி மாநிலங்களை நேரு உருவாக்கினார். இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி கொடுத்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்கள