Posts

Showing posts with the label #A | #Macr | #Dagger | #A

மக்களே உஷார்..!! குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் இனி ரூ.1,000 அபராதம்..!! 441993303

Image
மக்களே உஷார்..!! குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் இனி ரூ.1,000 அபராதம்..!! குப்பை சேகரிக்கும் வாகனங்களில் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நம்மை சுற்றி இருக்கும் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் குப்பை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று வீடுகள் தோறும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நோட்டீஸ் வழங்கி வருகிறார்கள்.    அதில், பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து கொடுக்க உத்தரவிட்டதுள்ளது. அதன்படி உணவு, காய்கறி-பழம், இறைச்சி, தோட்டம் மற்றும் காய்ந்த மலர்கள், இலை கழிவுகள் ஆகியவை மக்கும் குப்பையாகவும், பிளாஸ்டிக் பைகள், தண்ணீர், கண்ணாடி, பிளாஸ்டிக், அட்டைகள், காகிதம், செய்தித்தாள்கள், தெர்மோகோல், தோல், இரும்பு, மரம், டயர், டியூப், ரப்பர்