பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்1283203252
பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்...