தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு?
தமிழகத்திற்கு புதிய ஆபத்து - மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், போல், ஐரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொற்றின் பரவல் குறைந்ததால், படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலைகளும் இந்தியாவில் கால் பதித்தது. இந்த அலைகளின் போதும், ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பாதுப்பு குறையத் தொடங்கியதும் தளர்வ...