118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை2116726293
118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா படைத்த சாதனை இந்திய டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். பார்ம் அவுட்டில் தவித்த அவருக்கு இந்திய அணியிலும் கேள்விக்குறியான நிலையில் கவுண்டி கிரிக்கெட் விளையாடும் முடிவை எடுத்தார். ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாமல், கவுண்டி கிரிக்கெட்டில் தன்னுடைய பேட்டிங்கை நிரூபித்து இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தார். அவரின் இந்த முடிவு சரியாகவும் அமைந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்த அவர், அந்த தொடர் முடிவடைந்ததும் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார். சசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், பந்துவீச்சாளராகவும் மாறினார். பேட்டிங்கில் உட்சபட்ச பார்மிலும் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் இருக்கும் சசெக்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் பொறுப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மிடில் சசெக்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய அவர் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். 368...