அனிருத் எனக்கு கால் பண்ணி அதுக்காக ரொம்ப feel பண்ணாரு - மாளவிகா மோகனன்!


அனிருத் எனக்கு கால் பண்ணி அதுக்காக ரொம்ப feel பண்ணாரு - மாளவிகா மோகனன்!


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் இணைந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்களால் அந்த அளவிற்கு கவனிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பினார். நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வரும் மாளவிகா மோகனனுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. நடித்த சில படங்களிலேயே தமிழில் இப்பொழுது முன்னணி நடிகையாகவும் உள்ளார்

மாஸ்டர் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் முற்றிலும் ஆக்ஷன் கதை களத்தில் உருவான மாறன் படத்தில் பத்திரிக்கையாளராக மாளவிகா நடித்து இருப்பார். இப்படம் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தென் இந்தியாவைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இப்பொழுது தெலுங்கில் முன்னணி ஹீரோவுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஅமைப்பாளர் அனிருத்தும் மாளவிகா மோகனனும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். மாளவிகா விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்திருப்பார் . மாஸ்டர் லாக்டவுன் காரணமாக கொஞ்ச காலம் ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைக்கப்பட்டது. அப்போது லாக் டவுனில் மாளவிகா மோகனனுக்கு அனிருத் கால் செய்து இப்படி ஆயிடுச்சே .. எல்லாம் சீக்கிரம் சரியாகி பழையபடி பட வேலைகளை பார்க்க வேண்டும் என மாளவிகா மோகனனிடம் அனிருத் feel செய்து பேசியதாக நேர்காணல் ஒன்றில் மாளவிகா பகிர்ந்துள்ளார்.

Comments