சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!


சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!


டான் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் குறித்து அப்டேட் தந்துள்ளார் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இந்த படத்தை மே மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

டான் படத்தில் கொஞ்சம் சீரியஸான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீயிடம் உதவியாளராக இருந்தவர். இதனால் படத்தின் மீது ஓர் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதையும் படிங்க - உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் த்ரிஷாவின் அடுத்த படம்…

மாநாடு படத்தில் போலீசாக வந்து மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் பூபாலன் என்ற புரொபசர் கேரக்டரில் நடித்துள்ளார். மெர்சல் படப்பிடிப்பின்போது எஸ்.ஜே. சூர்யாவிடம் டான் படத்தின் கதையை சிபி கூறியுள்ளார். கதை உடனே பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லியுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

கடைசியாக மாநாடு படத்தில் சிம்புவுக்கு இணையாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மிரட்டியிருப்பார். இதேபோன்று, டான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு இணையான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - வரி பாக்கியை செலுத்துக - இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் இறுதி நோட்டீஸ்

டான் படத்தில் பிரியங்கா மோகன், சிவாங்கி, சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான பாடல்கள் நன்றாக ரீச் ஆகியுள்ளன.

மே 13-ம்தேதி டான் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

Cheeseburger Sliders Easy 30

Vestido de festa vinho longos para formaturas e casamentos

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!