முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண மண்டப லிஃப்ட் விபத்து: ஒருவர் பலி


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண மண்டப லிஃப்ட் விபத்து: ஒருவர் பலி


சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்தி குப்பம் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமான ஜெ.எப்.என்.திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது.

இந்த திருமண மண்டபத்தில் நேற்று (மே 13) திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெறவிருந்தது. வருகிறது இதன் காரணமாக அந்த திருமண மண்டபத்தில் பணிபுரிவதற்கு குமரன் நாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த.லட்சுமி நாராயண கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கேட்டரிங் நிறுவனம், வேலை செய்வதற்காக ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தியபோது லிஃப்ட்டில் விபத்து ஏற்பட்டது.

 இரண்டாவது மாடிக்கு சென்று விட்டு வந்துக் கொண்டிருந்த பணியாளர்கள் மூன்று பேர் லிஃப்ட்டில் இருந்தபோது அதன் கேபிள் அறுந்து  கீழே விழுந்தது.

லிஃப்டின் கேபிள் அறுந்ததால், லிஃப்ட் கீழே விழுந்தபோது பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. டமார் என்ற சப்தத்தைக் கேட்டு, மண்டபத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு சென்று பார்த்தனர்.

மேலும் படிக்க | ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான மாணவி - நடத்துனரால் அரங்கேறிய கொடூரம்

அப்போது லிட்டில் வயர் அறுந்து கீழே விழுந்திருந்தது தெரியவந்தது. லிப்டுக்குள் பார்த்தபோது கேட்டரிங் வேலைக்காக வந்திருந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் சித்தல். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

சித்தலின் முகம் நசுங்கிக் கிடந்தது. இவரைத் தவிர,  திருவண்ணாமலை மாவட்டத்தை செர்ந்த ஜெயராமன். விக்னேஷ் ஆகிய இருவரும் பலத்த காயங்களோடு மயங்கி நிலையில் இருந்தனர்.

விபத்து தொடர்பான தகவல், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.

பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் சிப்காட் காவல் துறையினர் விக்னேஷ் மற்றும்  ஜெயராமன் ஆகியோரை சென்னை அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பதினோராம் வகுப்பு பள்ளி மாணவன் சித்தல் என்பவரை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்களை வேலைக்கு அழைத்து வந்தது யார் எனவும் லிப்ட் கேபிள் எதனால் அறுந்து விழுந்தது என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog