இலங்கை அசாதாரண சூழல்... சமூக விரோதிகள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிர கண்காணிப்பு


இலங்கை அசாதாரண சூழல்... சமூக விரோதிகள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிர கண்காணிப்பு


இலங்கையில் தொடரும் வன்முறை காரணமாக இலங்கை மக்களோடு சமூகவிரோதிகள் தமிழகத்திற்கு தப்பி வராமல் இருப்பதற்கு கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அதிபர் மற்றும் பிரதமர் பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்களன்று போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது.  கடந்த 2 தினங்களாக நடந்த வன்முறை சம்பவங்களில் ஆளும் கட்சி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

220-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகிந்த ராஜபக்சே அலரி மாளிகையில் இருந்து தப்பி சென்று தற்போது பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: பிரபாகரன் பேராண்மை எங்கே.. ராஜபக்சே எங்கே: வைரமுத்து


இது ஒருபுறம் இருக்க, பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது, பதுக்கல் காரணமாக உணவு பொருட்கள், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாட்டு நிலவுகிறது. இதன் காரணமாக பலரும் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்து வருகிறது.

மேலும் படிக்க: ஓடி ஒளியும் ராஜபக்சே... கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய இடதுசாரி கட்சியினர்


தமிழகம் வரும் இலங்கை தமிழ் மக்களோடு சமூகவிரோதிகள், கடத்தல்காரர்கள் வருவதாக கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. இதன் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு படையினர் கடலுக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சமூகவிரோதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் தமிழகத்தின் உள்ளே வராத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog