IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC
IPL 2022 : பிளே ஆஃப் நுழைய கடைசி வாய்ப்பு.. வாழ்வா.. சாவா போட்டியில் மும்பையுடன் மோதும் டெல்லி MIvsDC
நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மொத்தம் 70 போட்டிகளை கொண்ட மிக நீண்ட தொடராக களைகட்டியது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. கடைசி இடம் யாருக்கு என்பது இன்றைய போட்டியில் உறுதியாகிவிடும். அந்தவகையில் இன்று நடைபெறும் 69 வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் களைகட்ட உள்ளது.
இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி - முன்னாள் சாம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை அணியை பொருத்தவரை இழப்பதிற்கு ஒன்றும் இல்லை சம்பிரதாய போட்டியாகவே களமிறங்கவுள்ளது. ஆனால் டெல்லி அணிக்கோ வாழ்வா சாவா போட்டியாகும்.
13 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளோடு பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது இருப்பினும் ரன் ரேட் பாசிட்டிவில் + உள்ளது. பெங்களூரு அணி 14 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை பதிவு செய்து 16 புள்ளிகளோடு பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் ரன் ரேட் நெகட்டிவில் உள்ளது
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறுவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பையும் உறுதி செய்துவிடும். எனவே டெல்லி அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மும்பை அணி வென்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மும்பை அணியின் வசம் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டெல்லி அணி கடைசியாக விளையாடிய இரண்டு போட்டியிலும் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இருப்பினும் ஓபனிங் பாட்னர்ஷிப் சொதப்புகின்றனர். கடைசியாக விளையாடிய ஆறில் நான்கு டக் அவுட் பாட்னர்ஷிப். பிரித்வி ஷா இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. காயம் சரியாகும் பட்சத்தில் கடைசி நேரத்தில் களமிறக்கவும் வாய்ப்புள்ளது. இல்லையென்றால் சஷர்ப்ராஸ் கான் - வார்னர் ஜோடி மும்பையுடன் விக்கெட் கொடுக்காமல் அடித்து விளையாடினால் மட்டுமே இமாலய ஸ்கோரை எட்டமுடியும்.
Also Read: 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி.. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!
மும்பையுடன் வார்னர் ஆறு அரைசதங்களை விளாசி தள்ளியுள்ளார் எனவே அவருடைய வானவேடிக்கை தொடரும் என எதிர்பார்க்கலாம். மிட்செல் மார்ஷூம் ஃபார்மில் உள்ளதால் பவர்பிளேயில் அதிரடியை எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் குல்தீப் - அக்ஷர் அசத்த காத்திருக்கின்றனர். கலீல் - ஷர்துல் கூட்டணி இவர்களுடன் நாட்ஜே வேகத்தில் பலம் சேர்க்கிறது.
இழப்பதற்கு ஒன்னும் இல்லை என்பதால் மும்பை வீரர்கள் நெருக்கடி இல்லாமல் களமாடவுள்ளனர். ரன் ரேட் மிகவும் மோசமாக உள்ளதால் வெற்றி பெற்றாலும் கடைசி இடம் தான் கிடைக்கும். இந்த போட்டியில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்க வாய்ப்புள்ளது. வான்கடே மைதானத்தை பொருத்த வரை பனிப்பொழுவு கடந்த சில போட்டிகளை கடுமையாக பாதித்துள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. எனவே டாஸ் முக்கியத்தும் பெறுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment