Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்!


Alia Bhatt:சொன்னதை செய்து காட்டிய ஆலியா பட்... கொண்டாடும் ரசிகாஸ்!


நடிகை ஆலியா பட் செய்த காரியத்தால் அசந்து போயுள்ளனர் ரசிகர்கள்.

திடீரென திருமணம்

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும் நடிகர் ரன்பீர் ட கபூரும் கடநத் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் பரவிய நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

2 மாதங்களில்

மும்பையில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். இந்நிலையில் திருமணம் ஆன 2 மாதங்களில் தான் கர்ப்பமான தகவலை கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஆலியா பட்.

ரசிகர்கள் கொண்டாடும்

ஆலியா பட் தான் தாயாகப் போகும் தகவலை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதனை பார்த்த பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆலியா பட் சொன்னதை செய்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

30 வயதில் திருமணம்

அதாவது தனது பழைய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஆலியா பட், 30 வயதில் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 30 வயதில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், அனைவரையும் ஆச்சரியப்படுத்தலாம் என்று நடிகை கூறியிருந்தார்.

தயாராக இருக்கும்போது

மேலும், ஆலியா தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தனது குழந்தைகளைப் பற்றி பேசினார். குழந்தைகள் பெற்றுக்கொள்ளதான் திருமணம் செய்து கொள்வேன் என்று எப்போதும் நம்புவதாக தெரிவித்த ஆலியா, குழந்தைகள் பெற தயாராக இருப்பதாக உணரும் போதும் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

அம்மாவாகி விட்டார்

சொன்னப்படியே திருமணம் ஆன கையோடு அம்மாவாகி விட்டார் நடிகை ஆலியா பட். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுவரும் நடிகைகள் மத்தியில் ஆலியா பட், திருமணம் ஆன 2 மாதங்களில் தாய்மையை அறிவித்துள்ள ஆலியா பட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog