17 வயது கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வரும், விடுதியின் வார்டனும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை! நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக விடுதியில் கடந்த 3 ஆம் தேதி, 17 வயது பெண் ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்லூரியினுள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடுதியிலுள்ள மாணவிகளிடமும், உயிரிழந்த மாணவியின் தோழிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகத்தில் முதல்வராகவும், மாணவி உயிரிழந்த விடுதியின் வார்டனாகவும் இருந்தவர் ரமேஷ். இவர் கல்லூர...