17 வயது கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வரும், விடுதியின் வார்டனும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை! நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்1287526350


17 வயது கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வரும், விடுதியின் வார்டனும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை! நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்


கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக விடுதியில் கடந்த 3 ஆம் தேதி, 17 வயது பெண் ஒருவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவிகள் போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவலளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி கல்லூரியினுள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விடுதியிலுள்ள மாணவிகளிடமும், உயிரிழந்த மாணவியின் தோழிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பமாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

விஷ்வேஷராய ஜூனியர் பல்கலைக்கழகத்தில் முதல்வராகவும், மாணவி உயிரிழந்த விடுதியின் வார்டனாகவும் இருந்தவர் ரமேஷ். இவர் கல்லூரியில் பயிலும் சில மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

மாணவி தற்கொலை செய்யப்படுவதற்கும் முன்பாக அவரை பலமுறை தனது அறைக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக ரமேஷ் துன்புறுத்தியுள்ளார். இதனால், பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இந்த கல்லூரியை விட்டு விட்டு வேறு கல்லூரியில் சேர நினைத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த கல்லூரி முதல்வரும், விடுதி வார்டனுமான ரமேஷ், மாணவி வேறு கல்லூரிக்கு சென்றால் நாம் மாட்டிக் கொள்வோம் என எண்ணி அச்சமடைந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாணவியை தனது அறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரமேஷ், மாணவி தூக்கிட்டு கொண்டது போல் செட்டப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் விசாரணையில் வெளி வந்த அடுத்த கணமே, ரமேஷை தேடி தனிப்படை போலீசார் விரைந்தனர்.

இதையடுத்து, வழக்கை கொலை வழக்ககாக பதிவு செய்து, ரமேஷின் செல்போன் சிக்னல் மற்றும் இதர தகவல்களை வைத்து தேடி வந்த போலீசார் பிஜாப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.

17 வயது கல்லூரி மாணவியை கல்லூரி முதல்வரும், விடுதியில் பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்த ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே போல் வேறு மாணவிகள் யாரேனும் சிக்கியுள்ளனரா...? பாதிக்கப்பட்டுள்ளனரா...? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog