ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு! 1728940809


ஒரே நாடு, ஒரே மொழி! இப்படி பேசுவோர் இந்தியாவின் எதிரிகள்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!


மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கொரோனா பாதிப்பு காரணமாக கருந்தரங்கு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட போது மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ வைத்தது. கூட்டாட்சி கருத்தியலும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்கு சிந்தனைகளும் இணைந்தது தான் இந்தியாவை முன்னேற்றி உள்ளன. இந்தியாவின் வேற்றுகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு இருந்தார்.

 

நேருவின் பெருமை

மொழிவாரி மாநிலங்களை நேரு உருவாக்கினார். இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி கொடுத்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தியதோடு, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை மாற்றினார்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு முதலமைச்சர்களிடம் கடிதம் வாயிலாக பேசினார். இதனால் தான் இந்தியா 75 ஆண்டுகள் வலிமையாக நின்றுகொண்டுள்ளது. இந்தியா மேலும் வலிமையாக இருக்க வேண்டும் என்றால், ஜனநாயக கருத்துகளை தொடர்ந்து பேச வேண்டும். சமத்துவம் மாநில சுயாட்சு, சகோதரத்துவம், சமூக நீதி கருத்துகளை வலியுறுத்தினால் மட்டுமே நாடு நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும்.

 

கூட்டாட்சி

75 ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டம் வெறும் கொண்டாட்டமாக இருந்திட கூடாது. அடுத்த வளர்ச்சிக்காக திட்டமிடலாக இருக்க வேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவு பெற்ற அரசுகளாக இருந்தால் தான், இந்தியா வலிமையாக இருக்கும். வலிமையான மாநிலங்கள் இருப்பது இந்தியாவின் பலம் தானே தவிர, பலவீனம் அல்ல. மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் மாநில அரசுகள் தான். அதனால் மத்திய அரசு கூட்டாட்சி கோட்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 

மக்களுக்கு எதிரான கொள்கை

நாடாளுமன்றத்தில் பேசுவதற்காக உரிமையே மறுக்கப்படுகிறது. திமுக எம்பி-க்கள் உட்பட 27 எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கருத்து கூறுவதற்கான களத்தில் கூட கருத்து பேச முடியாத நிலை இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை உட்பட மத்திய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றன. அதேபோல் இந்தியாவுக்கு ஒரே தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog