Posts

இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Image
இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. Spread the love

35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை….

Image
35 நாள் கழிச்சும் பீஸ்ட்டை விட்டுவைக்காத நெட்டிசன்கள்.! இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை…. தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் 13ஆம் தேதி பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் இருந்து வெளியான ட்ரைலர் இப்படம் முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. மேலும், அதற்கடுத்த நாள் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானதால், தற்போது பீஸ்ட் திரைப்படம் வெளியான தடமே தெரியாத வண்ணம்  படத்தை தியேட்டரில் இருந்து தூக்கிவிட்டனர். இந்த படம் வெளியாகி இன்றோடு 35 நாட்கள் ஆகிறது. ஆனால், இன்னும் பீஸ்ட்டை வச்சி செய்ய இணையவாசிகள் தயாராகவே இருக்கின்றனர். ஆம், அதில் ஒரு காட்சியில் விஜய் ஒரு ராணுவ விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தனது மாஸ்க் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை கழட்டி விடுவார். இதையும் படியுங்களேன் – நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்.., மேலும், எதிரே  ராணுவ விமானத்தில் வரும் பைலட்டிற்கு இங்கிருந்து சலாம் போடுவா

நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்..,

Image
நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்.., டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி, அதற்கடுத்து, ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஓர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா பவானிசங்கர். அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இங்கும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மேயாத மான், கசடதபற போன்ற படங்களில் மிகவும் நன்றாகவே இருக்கும். அதன் பிறகு, தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யா உடன்  பொம்மை ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. ப்ரியா பவானிசங்கரும், அஷோக் செல்வனும் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ஹாஸ்டல் . இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர்கள் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிரியா பவானிசங்கர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அங்குள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குரூப் இணையத்தில் உருவாக்கி உள்ளனர். இதையும் படியுங்களேன் – சூர்யா பேருக்கு இப்படி ஒரு களங்கமா.?! இதெல்லாம் நியமில்லங்க பேரம் பேசாதீங்க.., அதற்கு

இடுப்ப காட்டியே ஆள மயக்கிப்புட்ட!…கட்டழகை காட்டும் இளம் நடிகை…

Image
இடுப்ப காட்டியே ஆள மயக்கிப்புட்ட!…கட்டழகை காட்டும் இளம் நடிகை… சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் எனும் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார். ஆனால், கண்மனி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு. இவரை இன்ஸ்டாகிராமில் 93 ஆயிரம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்?

Image
ஆர்ஆர்ஆர் இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்? கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகிறது. பிரம்மாண்டமான ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற கமல்ஹாசன் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக பிரபலமாக இருக்கும் யூ டியூப் சேனல்களில் பிரத்யேகமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழில் பிரபலமாக இருக்கும் ‘வில்லேஜ் குக்கிங்’ சேனல் குழுவினருடன் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்துக்காக புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் உலாவுகிறது.  மேலும் படிக்க | பத்தல பாடலுக்கு நடனமாடிய சிம்பு! வைரலாகும் வீடியோ! அதேநேரத்தில் விக்ரம் படத்துக்குப் பிறகு அடுத்த யாருடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விக்ரம் ஆடியோ ரிலீஸில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், மதுரையை மையமாகக்கொண்ட கதை ஒன்று தயாராக இருப்பதாகவும், கமல்ஹாசன் ஓகே சொன்னால் இயக்க தயாராக இருப்பதாகவும் விழா மேடையிலேயே அதிரடியாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் அடுத்ததாக பா.ரஞ்சித்துடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கி

கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

Image
கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலைஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர, மற்ற ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று (திங்கட்கிழமை) கேரளா வந்துள்ளனர். தமிழகத்தின் அரக்கோணத்தில் இருந்து தலா 100 பேர் கொண்ட 5 குழுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் திருவள்ளூர்: மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கைகளை மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டம், 2016ன் படி உருவாக்கவேண்டும். அவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு மற்றும் நியமனம் வழங்கவேண்டும். 20 பேருக்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதை இரு நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின் போது மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வுதளம், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஆய்வறிக்கையை பூர்த்தி செய்த