இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


இன்று 17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயில் இருந்தாலும், அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து பொதுமக்கள் தப்பித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த சில மணி நேரங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Spread the love

Comments

Popular posts from this blog

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!