விஜய் சார் போனுக்காக வெயிட் பண்ணுறேன்...பல வருடமாக காத்திருக்கும் பிரேமம் டைரக்டர்


விஜய் சார் போனுக்காக வெயிட் பண்ணுறேன்...பல வருடமாக காத்திருக்கும் பிரேமம் டைரக்டர்


அல்போன்ஸ் புத்திரன் தற்போது இரண்டு மலையாள படங்களை இயக்கி வருகிறார். ஆனாலும் பிரேமம் படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் டைரக்டராகி விட்ட அல்போன்ஸ் புத்திரனிடம் மீண்டும் எப்போது தமிழ் படம் இயக்குவீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரசிகர்கள் ஒருவர், கோலிவுட் ஸ்டார் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என கேட்டார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் பாடலான ஜாலியோ ஜிம்கானா லிரிக்கல் வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதற்கும் ரசிகர்கள் ஒருவர், விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் ஒன்றை பண்ணுங்க என கேட்டிருந்தார். ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதால் இதற்கு சோஷியல் மீடியாவிலேயே பதிலளித்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

விஜய்யை வைத்து ரொமான்டிக் படம் எடுப்பீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், பிரேமம் படம் ரிலீசானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு வந்த முதல் போன் கால் விஜய்யிடம் இருந்து தான். அவரது மேனேஜரும் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் என்னை கூப்பிட்டு பேசினார். விஜய்யை பர்சனலாகவும் ஒரு முறை சென்று சந்தித்தேன்.

ஒருநாள் நிச்சயம் என்னை விஜய் என்னை கூப்பிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக தான் காத்திருக்கிறேன். அப்படி அவர் என்னை கூப்பிடும் நாளில் நிச்சயம் விஜய் சாரை வைத்து இயக்கும் படமும் உறுதியாகும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரனே இப்படி சொல்லி விட்டதால் விஜய்யும் அல்போன்ஸ் புத்திரனும் ஒரே படத்தில் இணைந்தால் அது எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தை மடித்து விட்டு, வம்சி பைடபள்ளி இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார் விஜய். அவரைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் விஜய்யை இயக்க காத்திருக்கிறார்கள் என தகவல் பரவி வருகிறது. விஜய்யை இயக்க காத்திருக்கும் டைரக்டர்கள் லிஸ்ட்டில் தற்போது அல்போன்ஸ் புத்திரனும் இணைந்து விட்டார்.

Comments

Popular posts from this blog

Poco F4 5G Goes on Sale in India for the First Time Today: Price, Specifications, Launch Offers

மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி

சிவகார்த்திகேயன் டான் பட அப்டேட்… எஸ்.ஜே. சூர்யாவின் கேரக்டர் இதுதான்!