IPL 2022: ‘கேப்டன் ஆனார் சஹல்’…ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு: வாழ்த்துக்கள் சொன்ன சாம்சன்!


IPL 2022: ‘கேப்டன் ஆனார் சஹல்’…ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு: வாழ்த்துக்கள் சொன்ன சாம்சன்!


ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதிமுதல் மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், XI அணியை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

ராஜஸ்தான் அணி:

ராஜஸ்தான் அணி ஐபிஎல் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையில் கோப்பை வென்று சாதனை படைத்த நிலையில், அதன்பிறகு இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறது. குறிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதையே பெரிய சாதனையாக கருதி வருகிறது.

இந்நிலையில் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பு கேப்டன் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரை தக்கவைத்த அந்த அணி, கடந்த மாதம் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரவிசந்திரன் அஸ்வின், போல்ட், படிக்கல், ஹெட்மையர், சஹல், சைனி போன்ற தரமான வீரர்களை தேர்வு செய்து, மீண்டும் இரண்டாவது முறை கேப்பை வெல்ல தீவிரமாக தயாராகி வருகிறது.

இப்படி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருவதையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்தும், அந்த அணியின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் தொடர்ந்து, அப்டேட்களை தந்து வருகிறது. இதனை வைத்துதான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்பாடுகளை ரசிகர்கள் தெரிந்து வருகிறார்கள்.

சஹல் கேப்டன்:

இந்நிலையில், சரியாக இன்று 12.56-க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ‘‘யுஜ்வேந்திர சாஹல்தான் புதுக் கேப்டன்’’ என பதிவிட்டு, சாஹலின் புகைப்படம் ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், பெரும் பரபரப்பு நிலவியது. இனைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சனும் வாழ்த்துகள் சஹல் எனப் பதிவிட்டு பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்தார்.

ஹேக் செய்யப்பட்டது:

இதனைத் தொடர்ந்து சாம்சனின் இந்த பதிவை ரீட்விட் செய்த ராஜஸ்தான் ராயல் ‘பொறாமை, பொறாமை’ எனப் பதிவிட்டது. அதன்பிறகுதான், ராஜஸ்தான் ராயல்ஸ் ட்விட்டர் கணக்கை யுஜ்வேந்திர சஹல் ஹேக் செய்த விவகாரம் தெரிய வந்தது. அதாவது, அணியின் ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை அவர் திருடி எடுத்திருக்கிறார்.

அதன்பிறகு ராஜஸ்தான் ட்விட்டர் கணக்கில் இருந்து மீண்டும் ஒரு ட்வீட்டை வெளியிட்ட சாஹல், ‘‘சஹல் ஓபனராக களமிறங்க வேண்டும் என்றால், 1000 ரீட்விட்’’ செய்யுங்கள் எனப் பதிவிட்டார். இனைத் தொடர்ந்து சாஹலை பலரும் நகைச்சுவையாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog