குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..!


குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..!


நம்மில் பலரும், பலமுறை இந்த அழகான அனுபவத்தில் சிக்கி இருப்போம். அதாவது அதிகாலையில் எங்கிருந்தோ நம் காதுகளுக்கு எட்டிய ஒரு பாடலை நாம் அடிக்கடி முனுமுனுத்திருப்போம். அந்த பாடல் அல்லது மெல்லிசையானது நாள் முழுவதும் நம் தலையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கும்.

நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரி, அல்லது ஒரு பிஸியான நாளை வெற்றிகரமாக கடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தாலும் சரி, உங்களது மூளை மீண்டும் மீண்டும் அதே பாடலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும். இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி வாருங்கள்! இந்த கேள்விக்கான அறிவியல் விளக்கத்தை பற்றி பார்ப்போம்!

ஒரே பாடலை நாம் ஏன் மீண்டும் மீண்டும் முனகுகிறோம் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் / நிபுணர்கள் கூறும் காரணம் - காதுபுழுக்கள்! காதுப்புழுக்கள் என்பது ஒருவிதமான புழுவோ அல்லது உயிரினமோ அல்ல, அவைகள் ஒட்டுண்ணிகள் ஆகும். உங்கள் தலையில் தங்கும் இவ்வகை ஒட்டுண்ணிகள் அறிவாற்றல் அரிப்பு (Cognitive itch) அல்லது மூளை அரிப்புக்கு (Brain itch) வழிவகுக்கும்.

நாம் ஒவ்வொரு முறையும் ஒரு இசையைக் கேட்கும்போது, மூளையின் ஆடிட்டரி கார்டெக்ஸ் (auditory cortex) எனப்படும் ஒரு பகுதி தூண்டப்படுகிறது. இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியில் பங்குகொண்ட தன்னார்வலர்களுக்கு ஒரு பழக்கமான பாடலின் ஒரு பகுதியை வாசிக்கும் போது ​​​​அவர்களின் ஆடிட்டரி கார்டெக்ஸ் தன்னிச்சையாக மீதமுள்ள பாடலின் பகுதியை நிரப்புவது கண்டறியப்பட்டுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், ஒரு இசை முடிந்த பிறகும் கூட அவர்களின் மூளை தொடர்ந்து அந்த இசையை முணுமுணுக்கிறது. இதை டார்ட்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மூளையின் இந்த அரிப்பை தீர்க்க ஒரே ஒரு வழி தான் உள்ளதாம் - அது குறிப்பிட்ட பாடலை மனதிற்குள் திரும்பத் திரும்ப பாடுவதே ஆகும்!

மதிய நேரத்தில் தூங்குவது நல்லதல்ல என நினைக்கிறீர்களா..? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கத்தை கேளுங்க..

பாடல்கள் ஏன் நம் எண்ணங்களில் சிக்கிக் கொள்கின்றன என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் உள்ளன. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இப்படியாக சிக்கிக்கொண்ட இசை அடக்கப்பட்ட எண்ணங்களைப் போன்றது. நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் அவற்றை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது.

சின்சினாட்டி காலேஜ் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பல்கலைக்கழகத்தின் மார்க்கெட்டிங் பேராசிரியர் ஆன ஜேம்ஸ் கெல்லாரிஸ், காதுப்புழுக்கள் மற்றும் மூளை அரிப்புகளை ஆராய்ச்சி செய்து, நம்மில் 99 சதவீதம் பேர் அதற்கு அடிபணிந்துவிட்டதாகக் கண்டறிந்துள்ளார்.

அதாவது உங்கள் தலைக்குள் சிக்கிய ஒரு பாடலை அகற்ற எந்தவொரு உறுதியான வழியும் இல்லை. சில பாடல்கள் சிறிது நேரத்தில் மறக்கப்படும்; சில பாடல்கள் பல நாட்கள் முணுமுணுக்கப்படும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட ட்யூன் / பாடல் உங்களை மிகவும் தொந்தரவு செய்தால், நீங்கள் மற்றொன்றிற்கு மாறலாம், அந்த பாடல் மிகவும் மென்மையான ஒரு பாடலாக இருப்பதையும் உறுதி செய்துகொள்ளவும் .

 

Comments

Popular posts from this blog