இன்று முதல் அனைத்து உணவகங்களில் விலை உயர்வு! கோபத்தில் மக்கள்!!


இன்று முதல் அனைத்து உணவகங்களில் விலை உயர்வு! கோபத்தில் மக்கள்!!


வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலையும் வரலாறு காணாத அளவு உயர்த்தப்பட்டது. இதனால் வணிக சிலிண்டர் விலை ரூ.2406 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் உணவகங்களில் விற்பனை செய்யும் பண்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டீ விலையில் ரூ.2ம் காப்பி விலையில் ரூ.3ம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் உணவு பண்டங்களின் விலையும் 20% வரை உயர்த்தப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை உணவக சங்க செயலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசு தொடர்ந்து எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி வருவதால் உணவக தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 2021ல் ரூ.1200 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது இருமடங்காக அதாவது ரூ2400க்கு மேல் அதிகரித்துள்ளது.

அதே போல் காய்கறி, சமையல் எண்ணெய், அரிசி, பருப்புக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டைவிட உணவுப் பண்டங்கள் தயாரிப்பில் 20 % வரை செலவுகள் அதிகரித்துள்ளன. இந்த செலவினங்களை ஈடுகட்ட உணவு பண்டங்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.உறுதியான முடிவு எடுக்க ஏப்ரல் 6ம் தேதி உணவக உரிமையாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் விலை உயர்வு முடிவு செய்யப்படும். டீ, காபி முதல் அனைத்து உணவுப் பொருட்களும் 20% வரை உயர்த்தப்படலாம். அதன் பிறகு படிப்படியாக சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தப்படும்.

சென்னையில் மொத்தம் உள்ள 15000 உணவகங்களில் உணவிற்கு பயன்படுத்தும் மூலப்பொருட்கள், செலவினங்கள், வாடகைக்கு ஏற்ப உணவின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நடுத்தர உணவகங்களில் ரூ 30க்கு விற்ற இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் வகைகள் அனைத்தும் ரூ5 வரை உயர்த்தப்படும். சாப்பாடு,பிரியாணி போன்ற வகைகள் ரூ 20 வரை உயர்த்தப்படலாம். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உணவகங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கினால் மட்டுமே விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog