ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி


ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி


மும்பை,மே 21: சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்கத்தில் விக்கெட் வீழ்ந்தபோதும் மொயின் அலி பேட்டிங்கில் சரவெடியை நிகழ்த்தினார். 57 பந்துகளை சந்தித்த அவர் 13 பவுண்டரி், 3 சிக்ஸர்் உட்பட 93 ரன்களை குவித்து அவுட் ஆனார். மற்ற அனைவரும் சொதப்ப இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுத்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. ெஜய்ஸ்வால் 59(44) ரன், ரவிசந்திரன் அஸ்வின் 40*(23) எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் இதன்மூலம் 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது.

Tags:

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல்

Comments

Popular posts from this blog