துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு! அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ‘அதிமுக தலைமை நிலைய செயலாளர் தலைமை கழகம்’ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், தலைமை கழக நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி , கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களாக உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் நடைபெறும் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை; கூட்...
Comments
Post a Comment