பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
கல்வித் தகுதி: முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை (1st Year Diploma Course)
பத்தாம் வகுப்பு (SSLC / Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே
2.நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கை: (Direct Second Your Diploma Admission)
மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள் பயின்றிருக்க வேண்டும்.
Physics/Mathematics/Chemistry/Computer Science/Electronics / Information Technology/Biology/ Informatics Practices / Biotechnology/Technical Vocational Subject /Agriculture / Engineering Graphics/ Business Studies/Entrepreneurship (ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகள்)
(அல்லது)
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (10 std passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology)
இதையும் வாசிக்க: 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ
3. பகுதி நேர பட்டயச் சேர்க்கை : (Part-Time Diploma Course)
10-ஆம் பகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
முதலாமாண்டு, பகுதி நேர பட்டயப் படிப்பு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கைக்கு | 23.06.2022 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 8.7.2022 ஆகும் |
பதிவுக் கட்டணம்: இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். விண்ணப்பதாரர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம் ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்
ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு, ITI மதிப்பென் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதார் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்களை மாணவர்கள் https.//www.tmpaly.in இணையதள வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment