விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு…


விக்ரம் பிரபு நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியீடு…


விக்ரம் பிரபு நடித்துள்ள பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது டீசர் வெளியாகியுள்ளது. ஆக்சன் த்ரில்லர் ஜானரில் பாயும் ஒளி நீ எனக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். கார்த்திக் அத்வைத், இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு, வாணிபோஜன் இவர்களுடன் தனஞ்சயா, ஆனந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.

இதையும் படிங்க - கடற்கரையிலிருந்து ரொமான்டிக் போட்டோஸ் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்!

வானம் கொட்டட்டும் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடிக்க நடிகர் விக்ரம் பிரபு ஒப்பந்தமானார். இந்த நிலையில் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

டீசரைப் பார்க்க

இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்பட்டு இருந்தாலும், படத்தின் கதை, திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவை காரணமாக நல்ல பெயர் இந்த படத்திற்கு கிடைத்தது.

நடிகர் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக 2012ல் கும்கி வெளியானது. இந்த படம் மெகா ஹிட் அடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

இதையும் படிங்க - என் அறியாமையை உணர்கிறேன்... பஞ்சாங்க சர்ச்சை குறித்து விளக்கமளித்த மாதவன்!

கதையம்சம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படங்களை தேர்வு செய்து விக்ரம் பிரபு நடிக்கிறார். இருப்பினும் ஒரு சில படங்கள் மட்டுமே மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வரிசையில் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படம் இடம் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அடுத்ததாக மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

Comments

Popular posts from this blog