கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!


கதிர் -முல்லை சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுங்க.. ஓபனாக விருப்பத்தை சொன்ன ரசிகர்கள்!


விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காணப்படுகிறது. தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்த சீரியல் முன்னேறி வருகிறது. தொடர்ந்து பல திருப்பங்களுடன் தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு தந்து வருகிறது.

அண்ணன் -தம்பிகள் பாசம், அவர்களை திருமணம் செய்த பெண்களின் உணர்வுப்பூர்வமான உறவு உள்ளிட்டவற்றை காட்சிப் படுத்தி வருகிறது இந்தத் தொடர். என்னதான் தனிக்குடித்தனங்கள் தற்காலங்களில் பெருகியிருந்தாலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதற்கு இந்தத் தொடர் மிகச்சிறந்த உதாரணம்.

ரசிகர்கள் இந்தத் தொடருக்கு கொடுத்துவரும் தொடர் ஆதரவு கூட்டுக் குடும்பங்கள் மற்றும் உறவுகளின்மீதான மக்களின் ஆர்வம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. தற்போது இந்தத் தொடரில் மிகவும் சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடரில் மற்றவர்களின் சூழ்ச்சியால் கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து மூர்த்திக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சிறப்பான வாழ்க்கையை உறவுகளை கொண்டிருந்த அந்தக் குடும்பத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கதிர் மற்றும் முல்லையை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர தனம் மேற்கொண்ட முயற்சிகளும் வீணாகியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் அடுத்தக்கட்டம் குறித்தும், தொடரில் ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்கள் குறித்தும் விஜய் டிவி தற்போது பப்ளிக்கிடம் கருத்துக் கேட்டுள்ளது. அவர்களில் அதிகமானவர்கள் கதிர் -முல்லையையே கைக்காட்டியுள்ளனர். மேலும் இந்தத் தொடரில் அவர்கள் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த கதிர் -முல்லை

தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் மூர்த்தி வந்துக் கூப்பிட்டால் கதிர் கண்டிப்பாக வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் கூறியுள்ளனர். மேலும் அனைவரும் ஒருசேர கதிர் -முல்லை வீட்டிற்கு சீக்கிரமா வாங்க என்றும் கூறியுள்ளனர். ஏராளமானவர்கள் இந்தத் விஷயத்தை மிகவும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் இந்தத் தொடருக்கு ரசிகர்களின் ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளது என்பது தெரியவருகிறது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா தொடர்களை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 3வது இடத்தில் உள்ளது. தற்போது தொடர்ந்து இந்தத் தொடரில் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் சூழலில் இந்த தொடர் அடுத்த இடத்திற்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog

Cheeseburger Sliders Easy 30

Vestido de festa vinho longos para formaturas e casamentos

துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!