Google Warning: கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள்


Google Warning: கூகுள் பிளேஸ்டோரில் இருக்கும் உளவு செயலி - உடனே டெலிட் செய்யுங்கள்


உளவு பார்க்கும் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்களுக்கு சேவை வழங்கும் செயலிகள் போல் அறிமுகமாகி, தனிநபர் தகவலை திருடும் மோசடி வேலைகளில் ஈடுபடத் தொடங்குகின்றன. இது கவனக்குறைவாக பயன்படுத்தும் மக்களுக்கு தெரிவதில்லை. இதுபற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. இதன்மூலம் ஏற்படப்போகும் பேராபத்துக்களும் தெரியாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயம்,. அதேநேரத்தில் இத்தகைய செயலிகளை அடையாளம் கண்டு, பயன்பாட்டை நீக்க கூகுள் மக்களுக்கு உதவுகிறது. 

அந்தவகையில் மக்களை உளவு பார்க்கும் மோசடி செயலி ஒன்றை கூகுள் லேட்டஸ்டாக கண்டுபிடித்துள்ளது. ஸ்லைஸ் ஆப் (Slice App) பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை உளவு பார்க்க முயற்சித்துள்ளது. இதனை யூசர்களின் தரவைத் திருட முயற்சிக்கும் தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறிய உதவும் Google Play Protect, ஸ்லைஸ் செயலியின் செயல்பாட்டைக் கண்டுபிடித்துள்ளது. அடிக்கடி இந்த செயலியின் பயன்பாடு சந்தேக வளையத்திற்குள் வந்ததையொட்டி உளவு செயலி என அடையாளப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | நாள் முழுவதும் AC இயக்கினாலும் மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க இதை பொருத்தவும்

Slice App மோசடி செயலி

ஸ்லைஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் உள்ளிடவைகளை உளவு பார்த்துள்ளது. தனிப்பட்ட அழைப்பு வரலாற்றையும் அணுக முயற்சி செய்துள்ளது. இதனைக் கண்டுபிடித்த கூகுள் பிளே புரோடக்ட், இந்த செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை  அந்த செயலியை ஓபன் செய்தவுடன் கூகுள் பிளே புரோடக்டுக்கு அழைத்துச் சென்று எச்சரித்துள்ளது. அத்துடன், உடனடியாக டெலிட் செய்யுமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளது. 

Slice App கொடுத்த விளக்கம்

கூகுளின் இந்த அறிவிப்புக்கு டிவிட்டரில் ஸ்லைஸ் ஆப் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செயலியில் இருந்த தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆண்டிராய்டு பதிப்பில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்த 4 மணி நேரத்துக்குள் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் ஸ்லைஸ் செயலியில் இந்த பிரச்சனை இருந்தால், ஒருமுறை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.  

மேலும் படிக்க | SPYWARE WARNING: ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களை இலக்கு வைக்கும் ஹெர்மிட் ஸ்பைவேர்

ஸ்லைஸ் ஆப் மன்னிப்பு கேட்டது

இதுகுறித்து மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட ஸ்லைஸ் அப், வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பாதிப்பு விஷயத்தில் நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. தனியுரிமை தகவலை எடுப்பதில் உடன்பாடில்லை எனக் கூறிய அந்த செயலி, இனி வரும் காலங்களில் இத்தகைய தவறு நடக்காது எனத் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறியுள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Comments

Popular posts from this blog