தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..?


தாய்பால் VS பவுடர் பால்... குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிப்பது எது..?


முதன் முறையாக குழந்தை பெற்றுக்கொள்ளப் போகும் பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சந்தேகம் தங்களது குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதா? அல்லது புட்டிப்பால் கொடுப்பதா? என்பது தான்.

தாய்பால் குழந்தைகளுக்கு பல வகைகளில் நன்மை பயக்கிறது. ஆனால் சில பெற்றோர்கள் பார்முலா ஃபீடிங் எனப்படும் பால் பவுடர் முறை குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்களை தரும் என நினைக்கின்றனர். எனவே, குழப்பத்தைத் தவிர்க்க, ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா பரிந்துரைத்த சில குறிப்புகள், உங்கள் குழந்தைக்கு எது சிறந்தது என்பது குறித்த சரியான வழிகாட்டுதலை வழங்கும்.

இதுகுறித்து லவ்னீத் பத்ரா கூறுகையில், பெரும்பாலான இளம் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா ஃபீடிங் இரண்டில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த குழப்பத்தை எதிர்கொள்கின்றனர். இதனை முடிவு செய்ய இரண்டிலும் உள்ள நன்மைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்” என்கிறார்.

தாய்ப்பால் VS ஃபார்முலா ஃபீடிங் - எது சிறந்தது?

தாய்ப்பால்:

ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தாய்மார்களுக்கு, இது மீட்புக்கு உதவுகிறது மற்றும் கருப்பை மீண்டும் தனது பழைய அளவிற்கு வேகமாக திரும்ப உதவுகிறது. மேலும் தாய்மாருக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு அபாயத்தை குறைக்கிறது.

ஃபார்முலா ஃபீடிங்:

தாய் இல்லாத போது, ​​இந்த முறையில் குடும்ப உறுப்பினர் குழந்தைக்கு உணவளிக்கலாம் ஆனால் ஃபார்முலா ஃபீடிங் தாய்ப்பாலைப் போன்ற நோய்த்தொற்றுகள், நோய்கள் மற்றும் உடல் நிலைக்கு எதிராக அதே பாதுகாப்பை வழங்காது. ஃபார்முலா உணவு மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Rainbow Baby: ரெயின்போ பேபி என்றால் என்ன..? அந்த தருணம் எவ்வளவு ஸ்பெஷலானது?

நிச்சயமாக, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே மிகவும் சிறந்த உணவாகத் தோன்றும். ஒவ்வாமை ஏற்படாமல் குழந்தைகளை காக்கும் உணவு தாய்ப்பால் ஆகும். இரவு பகல் இல்லாமல் எந்த நேரத்திலும் உடனடியாகக் கிடைக்கும். தாய்பாலின் சுவை குழந்தைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதோடு, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி காரணிகள் குழந்தைக்கு சில நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

பால் பவுடர் மூலமாக குழந்தைக்கு புட்டிப்பால் புகட்டுவது போதுமான அளவு ஊட்டசத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்காது என்றாலும், தாயிடம் போதுமான அளவு பால் உற்பத்தியாகாத சந்தர்ப்பங்களில் அல்லது குழந்தை சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியாத சந்தர்ப்பங்களில் இது உதவியாக இருக்கும்.

குழந்தை பிறப்புக்கு பின் பெண்களை போலவே ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது - ஆய்வில் தகவல்

நேர்மையாக சொன்னால் இரண்டு முறைகளையும் முழுமையாக சரி அல்லது தவறு என கணிக்க இயலாது. ஏனெனில் பல பெண்கள் பிறப்பதற்கு முன் ஒரு முறையை முடிவு செய்து, குழந்தை பிறந்த பிறகு தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். மேலும் பல பெண்கள் தாய்ப்பாலூட்டவும், ஃபார்முலா ஃபீடிங்கையும் மேற்கொள்ள முடிவு செய்கிறார்கள், ஏனெனில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது மற்றொரு சிறந்த வழியாக அமைகிறது.

நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதில் சிரமப்படுகிறீர்கள் என்றால், ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது மருத்துவரிடம் உதவி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் முறைகளை கடைபிடிக்கலாம்.

 

Comments

Popular posts from this blog