Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்..
Wikipedia கன்டன்ட்டிற்காக பணம் செலுத்த தொடங்கியுள்ள கூகுள்..
நீண்ட காலமாக பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் தேடும் பல முக்கிய தகவல்களின் ஆதாரமாக விக்கிபீடியா உள்ளது. எனினும் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிளாட்ஃபார்ம் என்பதால், தகவல் 100 சதவீதம் நம்பகமானதாக இல்லை. இந்நிலையில் இந்த இணைப்பின் மூலம், கூகுள் அதை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
விக்கிமீடியா என்டர்பிரைஸ் என்பது சமீபத்தில் விக்கிமீடியா அறக்கட்டளையால் ஒரு விருப்ப தயாரிப்பாக தொடங்கப்பட்டது. விக்கிமீடியா என்டர்பிரைஸ் என்பது விக்கிபீடியா மற்றும் விக்கிமீடியா திட்டங்களை அதிக அளவில் மறு பயன்பாடு செய்து கொள்ளும் நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வணிக தயாரிப்பு (commercial product) ஆகும். இது இப்போது புதிய யூஸர்களுக்கு ஃப்ரி ட்ரெயல் அக்கவுண்ட்டை வழங்குகிறது. அவர்கள் இந்த ப்ராடக்ட்டுடன் தங்கள் தேவைகளை சிறப்பாக மதிப்பிட செல்ஃப் சைன்-அப் செய்யலாம்.
விக்கிபீடியாவிலிருந்து பல்வேறு வடிவங்களில் தரவை கூகுள் பயன்படுத்துகிறது. சர்ச் ரிசல்ட் பேஜின் வலது பக்கத்தில் தோன்றும் அதன் “knowledge panels” மிகவும் முக்கியமானவை. இதனிடையே 2021-ல் தொடங்கப்பட்ட விக்கிமீடியா என்டர்பிரைஸ், கூகுள் போன்ற அதன் யூஸர்கள் தங்கள் டேட்டாவை இன்னும் திறமையாக பயன்படுத்த அனுமதிக்கிறது. விக்கிப்பீடியாவின் வெப் பேஜ்களில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு கூகுள் போன்ற யூஸர்கள் பெறும் தரவுகள் பொதுவில் கிடைக்கும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, தகவல் எவ்வாறு அனுப்பப்படுகிறது மற்றும் என்ன தகவல் அனுப்பப்படுகிறது என்பதை இது ஒழுங்குபடுத்துகிறது.
இதன் மூலம் நம்பகத்தன்மையற்ற மற்றும் தவறான தரவுகள் பரவுவதை தடுக்க முடியும் என நிறுவனம் நம்புகிறது. கடந்த காலங்களில் கூகுள் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு பெரும் நன்கொடைகளை வழங்கியிருந்தாலும், வாடிக்கையாளராக கையொப்பமிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் இப்போது 10,000 ஆன்-டிமாண்ட் கோரிக்கைகள் மற்றும் 30 நாள் ஸ்னாப்ஷாட்டுக்கான வரம்பற்ற அணுகலை வழங்கும் ஃப்ரி ட்ரெயல் அக்கவுண்ட்டிற்கு தங்களது வெப்சைட்டில் சைன்-அப் செய்யலாம் என்று அறக்கட்டளை அறிவித்துள்ளது.
Also Read... கூகுள் குரோமில் காணப்படும் Autofill ஆப்ஷனை முடக்குவது எப்படி.?
விக்கிமீடியா அறக்கட்டளையின் மூத்த இயக்குனர் லேன் பெக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விக்கிமீடியா என்டர்பிரைஸ் பல உள்ளடக்க மறுபயன்பாடு மற்றும் ஆதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களின் முதல் 2 வாடிக்கையாளர்கள் இதற்கு முக்கிய உதாரணம். கூகுள் மற்றும் இன்டர்நெட் ஆர்க்கிவ் ஆகியவை விக்கிமீடியா உள்ளடக்கத்தை தனித்தனியான வழிகளில் பயன்படுத்துகின்றன என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment