நான் விஜய்யோட தீவிர ரசிகன்... அவரை வைத்து படம் இயக்க ஆசை... கனா இயக்குநரின் கனா! நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆயினும் படம் வசூல் சாதனை செய்துள்ளது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் விஜய் பங்கேற்றுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் சென்னையில் பூஜையுடன் துவங்கி நடந்து முடிந்துள்ளது. தற்போது ஐதராபாத்தில் இரண்டாவது கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ளார். படத்தை தயாரித்துவரும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு உருவாகி வருவதாகவும் விஜய் படத்திற்கே உரிய காமெடி, ஆக்ஷன் காட்சிகள் படத்தில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் இரண்டு மாதங்களில் நிறைவடைந்து படம் அ...
Comments
Post a Comment