மீண்டும் சரிந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் செம ஹேப்பி கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்றும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நிலவரம் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து ரூ. 4,881-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை...
Comments
Post a Comment