Posts

பெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்ரல் 26-2022) விலை: மாவட்ட வாரியாக நிலவரம்

Image
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20வது நாளாக இன்று பெட்ரோல், டீசல்... விரிவாக படிக்க >>

ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை வான்கடேவில் இன்று நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதனப்டி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 21 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடிக்க, பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது பஞ்சாப் அணி. அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு தவானும் பானுகா ராஜபக்சாவும் இணைந்து அடித்து ஆடினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். 7-15 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை குவித்தனர். ஐபிஎல் 2022: புதிய மைல் கல்லை... விரிவாக படிக்க >>

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு-13 லட்சத்தை தாண்டிய விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை!!

Image
நம் தமிழகத்தில் அடுத்த மாதம் 21ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மாதமே அதிகமானோர் விண்ணப்பம் செய்தனர். இந்த நிலையில் குரூப்-2 தேர்வு முடிந்த உடனேயே குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி ஜூலை 24-ஆம் தேதி நம் தமிழகமெங்கும் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்து கொண்டு வருகின்றனர். இந்த விண்ணப்பிக்கும் நாளானது ஏப்ரல் 28 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதனால் இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. அதுவும் குறிப்பாக ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என்றும் பேசப்பட்டு... விரிவாக படிக்க >>

3ஆவது நடைமேடையிலிருந்து புறநகர் ரயில்கள் இயக்கம்

Image
விரிவாக படிக்க >>

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

Image
ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையிலிருந்து கடந்த மார்ச் 23ம் தேதி பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகையும், படகில் இருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையில் இருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதிபதி கஜநிதிபாலன், 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மீனவர்களின் விசைப்படகு மீதான விசாரணை ஜூலை 15ம் தேதியில் நடைபெறும் எனவும், படகின் உரிமையாளர் படகிற்கான... விரிவாக படிக்க >>

சசிகலாவிடம் மீண்டும் விசாரணை: அடுத்த குறி எடப்பாடி பழனிசாமியா?

Image
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்தது சந்தேகத்தை கிளப்பியது. ஜெயலலிதா ஓய்வெடுக்க வேண்டுமென்றால் உடனடியாக கொடநாடு கிளம்பிச் சென்றுவிடுவார். அந்த வகையில் அதிமுகவின் அதிகார மையமாக விளங்கிய கொடநாட்டில் கொலை, கொள்ளை நடைபெற்ற போதும் எடப்பாடி பழனிசாமி அரசு அதை தீவிரமாக விசாரிக்க முன்வரவில்லை. இது பல தரப்பினரிடமும் கேள்விகளையும் சந்தேகத்தையும் உருவாக்கியது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.... விரிவாக படிக்க >>

குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..!

Image
குறிப்பிட்ட ஒரு பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறதா..? இதுதான் காரணம்..! நம்மில் பலரும், பலமுறை இந்த அழகான அனுபவத்தில் சிக்கி இருப்போம். அதாவது அதிகாலையில் எங்கிருந்தோ நம் காதுகளுக்கு எட்டிய ஒரு பாடலை நாம் அடிக்கடி முனுமுனுத்திருப்போம். அந்த பாடல் அல்லது மெல்லிசையானது நாள் முழுவதும் நம் தலையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கும். நீங்கள் அலுவலகத்தில் அமர்ந்து பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்தாலும் சரி, அல்லது ஒரு பிஸியான நாளை வெற்றிகரமாக கடந்து வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தாலும் சரி, உங்களது மூளை மீண்டும் மீண்டும் அதே பாடலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும். இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரி வாருங்கள்! இந்த கேள்விக்கான அறிவியல் விளக்கத்தை பற்றி பார்ப்போம்! ஒரே பாடலை நாம் ஏன் மீண்டும் மீண்டும் முனகுகிறோம் என்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் / நிபுணர்கள் கூறும் காரணம் - காதுபுழுக்கள்! காதுப்புழுக்கள் என்பது ஒருவிதமான புழுவோ அல்லது உயிரினமோ அல்ல, அவைகள் ஒட்டுண்ணிகள் ஆகும். உங்கள் தலையில் தங்கும் இவ்வகை ஒட்டுண்ணிகள் அறிவாற்றல் அரிப்பு (Cognitive itch) அல்...