திருப்பூர் : தமிழக நுாற்பாலைகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கான, ‘ஆர்டர்’களை வழங்கி வருகின்றன.நடப்பு சீசனில், இந்தியாவில் பஞ்சு விலை, வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி 97 ஆயிரம் ரூபாயை கடந்தது. கோவை, திருப்பூர் பகுதி ஜவுளித்துறையினரின் தொடர் கோரிக்கையால், பஞ்சு மீதான 11 சதவீத இறக்குமதி வரியை, மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தமிழக நுாற்பாலைகள், பஞ்சு இறக்குமதிக்கு ஆர்டர் வழங்க துவங்கியுள்ளன.‘இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ அமைப்பு கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது: தமிழக நுாற்பாலைகள் பஞ்சை இறக்குமதி செய்வதற்காக ஆர்டர்களை வழங்கி வருகின்றன. ஆஸ்திரேலியா, மேற்கு ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்காக ஆர்டர் வழங்கப்படுகிறது.தற்போது... விரிவாக படிக்க >>