நன்றி கூறி உருக்கமாக கடிதம் எழுதிய அஜித்! இணையத்தில் வைரல்!
நன்றி கூறி உருக்கமாக கடிதம் எழுதிய அஜித்! இணையத்தில் வைரல்! எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ,கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனத்தை இந்த படம் பெற்று தந்தாலும், வசூலில் பட்டைய கிளப்பியது, உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அடுத்த ட்ரீட் அஜித் 61: வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்றி மங்காத்தா பாணியில் ...