11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. 8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90.07 ஆக உள்ளது. தேர்ச்சி விவரங்கள்: தேர்ச்சிப் பெற்றவர்கள்: 7,59,856 (90.07%) மாணவியர் 4,11,612 (94.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 348,243 (84.86%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்1(100%) தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த மார்ச்-2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,15,442. தேர்ச்சிப் பெற்றோர் 7,83,160. தேர்ச்சி ச் சதவிகிதம் 96,04%. மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்: மாவட்டம் தேர்ச்சி விகிதம் கன்னியாகுமரி 95.08 திருநெல்வேலி 95.21 தென்காசி 90.35 தூத்துக்குடி 94.04 ராமநாதபுரம் 93.96 சிவகங்கை 93.92 விருது நகர் 95.44 தேனி 90.45 மதுரை 95.25 திண்டுக்கல் 86.38 ஊட்டி 91.05 திருப்பூர் 92.17 கோயம்பத்தூர் 94.63 ஈரோடு 92.13 சேலம் 88.62 நா...